/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் ரோட்டில் குவியும் மண்
/
விருதுநகரில் ரோட்டில் குவியும் மண்
ADDED : ஏப் 25, 2025 06:08 AM

விருதுநகர்: விருதுநகரில் காலை கடும் வெயிலும், மாலையில் அவ்வப்போது மழை பெய்வதால் ரோட்டோரங்களில் மழை தேங்கி காய்கிறது. இதனால் ஓரத்தில் இருந்த மண் மேவி ரோடு பாதி வரை வந்து வாகன ஓட்டிகளை சறுக்கி விழச்செய்கிறது.
விருதுநகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நுாறு டிகிரி வெயில் என்பது சர்வசாதாரணமாக இருக்கிறது. அதே நேரம் பருவநிலை மாற்றத்தால் மாலை 4:00 மணிக்கு மேல் வானிலை இதமாக மாறி காற்று வீசுகிறது. மழையும் பெய்கிறது. இந்நிலையில் வாகனங்கள் அதிகரித்து விட்ட சூழலில் ரோடுகளின் பராமரிப்பும் அதிகம் தேவைப்படுகிறது.
ஆனால் மாநில நெடுஞ்சாலை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் ரோட்டோரம், சென்டர் மீடியனை ஒட்டி மேவியுள்ள மண்ணை அகற்றுகிறது. இந்நிலையில் தற்போது, மழை வெயில் மாறி மாறி அடிப்பதால், மாலை நேரத்தில் பெய்யும் மழையால் மண் ரோட்டின் பாதி வரை வருகிறது. மீண்டும் வெயில் அடிக்கும் போது நீர் காய்ந்து மண் மட்டும் மேவி இருக்கிறது.
மேலும் பகல் நேரங்களில் வேகமாக செல்லும் போது புழுதி படர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரோட்டோரங்களில் செல்லும் டூவீலர் ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மண்மேவியதை அடிக்கடி அகற்ற முன்வர வேண்டும்.