/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேறும் சகதியுமான ரோடு, சுகாதாரமற்ற குடிநீர்
/
சேறும் சகதியுமான ரோடு, சுகாதாரமற்ற குடிநீர்
ADDED : நவ 23, 2025 04:58 AM

காரியாபட்டி: சேறும் சகதியுமாக இருக்கும் ரோட்டில் இடறி விழும் பள்ளி மாணவர்கள், வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்படும் குடிநீரில் புழு, பூச்சிகள், அடிக்கடி பாதிக்கப்படும் உடல்நிலை, குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் என மல்லாங்கிணர் பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
மல்லாங்கிணர் பேரூராட்சிக்கு உட்பட்ட முடியனுர் காலனியில் தெருக்கள் குண்டும், குழியுமாக உள்ளது. தெரு விளக்குகள் சரிவர எரியாததால் இருளில் மூழ்கி, இரவு நேரங்களில் நடக்க முடியவில்லை. மெயின் ரோட்டிற்கு செல்லும் ரோடு படுமோசமாக உள்ளது.
மழை நேரங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பள்ளி மாணவர்கள் இடறி விழுகின்றனர். வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. தொட்டி சுத்தம் செய்து பல வருடங்கள் ஆனதால் புழு பூச்சிகள் மிதக்கின்றன. சமைக்க, குடிக்க பயன்படுத்துவதால் அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுகிறது.
குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாகுகிறது. சுகாதார வளாகம் சரிவர பராமரிக்காததால் கதவுகள் சேதமடைந்து, பயன்படுத்த முடியவில்லை. திறந்தவெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.

