/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.1.09 லட்சம் கொள்ளை
/
டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.1.09 லட்சம் கொள்ளை
ADDED : நவ 23, 2025 05:00 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே தொட்டியான்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இதில் செல்லையாபுரத்தைச் சேர்ந்த சின்னராஜ், 50, மேற்பார்வையாளராகவும், பச்சேரியைச் சேர்ந்த சரவணன், 49, விற்பனையாளராகவும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு கடையை மூடிவிட்டு விற்ற பணம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 500 ரூபாயை பையில் வைத்து கிளம்பும்போது, அங்கு வந்த முகமூடி அணிந்த 3 நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி இருவரையும் மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இருவரிடம் உள்ள அலைபேசிகளை வாங்கி தரையில் போட்டு உடைத்து விட்டு தப்பி சென்றனர்.
திருச்சுழி டி.எஸ்.பி., பிரதீப், இன்ஸ்பெக்டர் அப்துல்லாஹ் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பரமக்குடி அருகே வளையனேந்தலை சேர்ந்த முத்துமணி, 35, செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த சதீஷ்குமார் 29, கமுதி அருகே பாப்பான்குளத்தை சேர்ந்த வசந்த், 29, ஆகிய மூவரும் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடித்தது தெரிய வந்தது. திருச்சுழி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

