நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சண்டை போடும் ரீல்ஸ்: வாலிபர்கள் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் - சிவகாசி ரோட்டில் சண்டை போடுவது போல ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட சிவகாசி அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜ் 21, வடபட்டியை சேர்ந்த தினேஷ்குமார் 21 ஆகியோர் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண் ஊழியரை தாக்கியவர் கைது
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அசோக் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் 38. இவரது தாயார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பணியாற்றி இறந்து போன நிலையில் அவரது பண பலன்களை பெற்றுத் தருமாறு கூறி நேற்று முன்தினம் காலை நகராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிவகாமியை அசிங்கமாக பேசி பிளாஸ்டிக் சேரால் தாக்கியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

