/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிரத் திருத்தம் பணிகள்
/
வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிரத் திருத்தம் பணிகள்
வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிரத் திருத்தம் பணிகள்
வாக்காளர் பட்டியல் சிறப்புதீவிரத் திருத்தம் பணிகள்
ADDED : நவ 23, 2025 04:40 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் இல்லங்களில் வசிப்போர், திருநங்கை வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்து திரும்ப பெறும் சிறப்பு நடவடிக்கைகள் நடக்கிறது. இதுவரை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று 15 லட்சத்து 86 ஆயிரத்து 409 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்கியுள்ளனர்.
வெளியூரில் பணிபுரிபவர்களுக்காக இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது. ஒவ்வொரு முதியோர் காப்பகங்களிலும் சிறப்பு உதவி மையம் அமைத்து கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்யப்படுகிறது.
மேலும் சாத்துார் அமீர்பாளையம் நம்பிராஜபுரம் அரசுப்பள்ளி, சிவகாசி தாசில்தார் அலுவலகம், விருதுநகர் சிவஞானபுரம் மூன்றாம் பாலித்தனவர் குடியிருப்பு ஆகிய இடங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

