/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சகதியாகும் ரோடு, வீடுகளின் முன் தேங்கும் கழிவுநீர்
/
சகதியாகும் ரோடு, வீடுகளின் முன் தேங்கும் கழிவுநீர்
சகதியாகும் ரோடு, வீடுகளின் முன் தேங்கும் கழிவுநீர்
சகதியாகும் ரோடு, வீடுகளின் முன் தேங்கும் கழிவுநீர்
ADDED : அக் 26, 2025 06:58 AM

சாத்துார்: தெருக்களில் ரோடு போடாததால் சகதியாகும் ரோடு, வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளின் முன் தேங்கும் கழிவுநீர், அங்கன்வாடி அருகே குப்பை கொட்டுவதால் சிறுவர்கள் கொசுக்கடியில் தவிப்பது போன்ற பிரச்சனைகளால் ஒ. மேட்டுப்பட்டி நேதாஜி ந கர் மக்கள் அவதியடைந்து வரு கின்றனர்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒ. மேட்டுப்பட்டி நேதாஜி நகரில் அங்கன்வாடி அருகே கொட்டப்படும் குப்பை, ரோடு வாறுகால் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நேதாஜி நகர் மெயின் ரோட்டில் மட்டும் சிறிது துாரம் சிமெண்ட் ரோடு போடப்பட்டுள்ளது. நகருக்குள் உள்ள தெருக்களில் சாலை வசதி இல்லை. தற்போது கழிவுநீரோடு மழை நீரும் பாதையில் தேங்கி நிற்கிறது. இதில் முதியவர்களும் குழந்தைகளும் நடந்து செல்கின்றனர் இதனால் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்கள் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
நகரில் அங்கன்வாடி பள்ளி அருகே குப்பை கொட்டப்படுகின்றன. இவற்றில் இருந்து கிளம்பும் ஈக்கள், கொது கடியால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கன்வாடி பள்ளி கதவுகளை ஆசிரியர்கள் மூடி வைத்து பாடம் நடத்துகின்றனர்.இந்தப் பகுதியில் குடிநீர் சரிவர கிடைக்காததால் வண்டி களில் விற்பனை செய்யப்படும் குடிநீரை குடம் ரூ 12 கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மெயின் ரோட்டில் இருந்து நகருக்கு வரும் ரோடும் சாலை வசதி இன்றி மண் ரோடாக உள்ளது. மழைக்காலத்தில் முற்றிலுமாக சேறும் சகதியுமாக மாறி விடுவதால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் இருசக்கர வாகனங்களை வீடுகளுக்கு கொண்டு செல்ல முடியாமல் ரோட்டிலேயே நிறுத்தி விட்டு செல்லும் நிலை உள்ளது.
நகரில் ஆண்கள் பெண்கள் பயன்படுத்துவதற்கு பொது சுகாதார வளாகம் இல்லாத நிலையில் மக்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
ரோடு வசதி தேவை மணிகண்டன், தொழிலாளி: இந்தப் பகுதியில் வீடு கட்டி 20 ஆண்டுகள் ஆகிறது. எந்த ஒரு அடிப்படை வசதியும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை.நகரில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு முறையான ரோடு வசதி இல்லை.சமீபத்தில் பெய்த மழை காரணமாக பாதை முழுவதும் சகதிக்காடாக உள்ளது.மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது போல சிமெண்ட் ரோடு அமைக்க வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறை பாலமுருகன்,பால் வியாபாரி: நகரில் வாரம் ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதனால் குடிநீரை தினமும் விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. உப்பு தண்ணீருக்கு மினி பவர் பம்ப் அமைத்துள்ளார்கள் அதை வைத்து புழக்கத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்.
குறுக்குத் தெருக்களில்ரோடு வசதி இல்லை. மழைக்காலத்தில் சிரமப்படுகிறோம்.
வாறுகால் இல்லை கவுசல்யா, தனியார் ஊழியர்: கழிவு நீர் செல்வதற்கு வாறு கால் வசதி இல்லை.வீட்டிலிருந்து வரும் கழிவு நீர் முழுவதும் பாதையில் தேங்கி நிற்கிறது. கழிவுநீரில் கால் வைத்து நடப்பதால் பல்வேறு தோல் நோய்களுக்கு ஆளாகி மக்கள் அவதிப்படுகின்றனர். அங்கன்வாடி பள்ளி அருகில் குப்பை கொட்டப்படுவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

