/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுகாதாரக்கேட்டில் எல்லம்மன் ஊருணி
/
சுகாதாரக்கேட்டில் எல்லம்மன் ஊருணி
ADDED : அக் 26, 2025 06:57 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே கல்லூரணியில் உள்ள எல்லம்மன் ஊருணியில் கழிவுநீர் குப்பை கொட்டப்பட்டு சுகாதார கேடாக உள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கல்லூரணி ஊராட்சிக்கு உட்பட்ட, ஆலடிபட்டி செல்லும் ரோடு அருகே எல்லம்மன் ஊருணி உள்ளது. ஊருக்கு பக்கத்தில் இருப்பதால் ஒரு காலத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்தது. நாளடைவில் பராமரிப்பு இன்றி சுற்றி சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. ஊருணியில் கழிவுநீர் விடப்பட்டும், குப்பைகள் கொட்டப்பட்டும் நாற்றம் எடுப்பதுடன் சுகாதார கேடாக உள்ளது. ஊருணியை பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. மழை காலம் துவங்கிய நிலையில், ஊருணியை தூய்மைப்படுத்தி மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

