தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேலைக்கு செல்லும் நேரத்தில் முகவூர் பஸ் டிரிப் கட்

 வேலைக்கு செல்லும் நேரத்தில் முகவூர் பஸ் டிரிப் கட்

 வேலைக்கு செல்லும் நேரத்தில் முகவூர் பஸ் டிரிப் கட்


ADDED : ஜூன் 30, 2026 11:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 11:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து தினமும் காலை 7:40 மணிக்கு புறப்பட்டு முகவூர் செல்லும் அரசு பஸ் டிரிப் கட் செய்யப்பட்டதால் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் பயனடையும் வகையில் ராஜபாளையம், தளவாய்புரம், செட்டியார்பட்டி வழியாக முகவூருக்கு தினமும் காலை 7:40, 11:40, 2:40, 4:50, 7:15 மணிக்கு புறப்பட்டு செல்லும் வகையில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது.

இதனால் ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ராஜபாளையத்தை கடந்து முகவூர் வரையுள்ள வழித்தட கிராமங்களுக்கு பயணித்து வந்தனர்.

அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் கட்டணம் இல்லாத பஸ் என்பதால் மிகுந்த பயனடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த பஸ் கடந்த சில மாதங்களாக காலை 7:40 மணிக்கு புறப்பட்டு செல்லும் டிரிப்பை கட் செய்து வேறு வழித்தடத்தில் இயங்குகிறது.

இந்த நேரத்தில்தான் ஏராளமான ஆண், பெண் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ராஜபாளையத்திற்கு அதிகளவில் பயணித்து வந்தனர்.

தற்போது இந்த பஸ் டிரிப் கட் செய்யப்பட்டதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, பெர்மிட் வழங்கும் போது கொடுக்கப்பட்ட நேர கால அட்டவணைப்படி காலை 7:40 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து புறப்பட்டு முகவூர் சென்று திரும்பும் வகையில் பஸ்சை இயக்க எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us