
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திருத்தங்கல் சக்தி மாரியம்மன் கோயில் 50 வது பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் அம்மன் சிம்ம வாகனம் புஷ்ப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடந்தது.
நேற்று பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

