/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பல்லாங்குழியான ரோடு: வாகன ஓட்டிகள் அவதி
/
பல்லாங்குழியான ரோடு: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 09, 2024 03:58 AM

சிவகாசி: சிவகாசி ஆனையூர் ஊராட்சி சிவானந்தா நகரில் பல்லாங்குழியாக மாறிய ரோட்டினால் இப்பகுதியினர் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி ஆனையூர் ஊராட்சி சிவானந்தா நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சிவகாசி ஸ்ரீவில்லிபுத்துார் மெயின் ரோட்டில் இருந்து சிவானந்தா நகர் செல்லும் ரோடு அமைக்கப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது ரோடு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பல்லாங்குழியாக மாறிவிட்டது. இதில் சைக்கிள், டூ வீலரில் வருபவர்கள் தவறி கீழே விழுகின்றனர். அவசர தேவைக்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளே வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. ஆட்டோவில் வருபவர்கள் மெயின் ரோட்டிலேயே இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். எனவே உடனடியாக ரோட்டை சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

