/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நுாலகத்தை இடித்ததற்கு எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
நுாலகத்தை இடித்ததற்கு எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
நுாலகத்தை இடித்ததற்கு எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
நுாலகத்தை இடித்ததற்கு எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 16, 2024 04:32 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ராமசாமிபுரம் காலனியில் ஆக்கிரமிப்பு செய்து நுாலகம் கட்டியதாக கூறி நகராட்சியினர் இடித்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி ராமசாமிபுரம் காலனியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் தங்கள் சொந்த செலவில் நுாலகம், படிப்பகம் கட்டி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் என நகராட்சி நகரமைப்பு அலுவலர்கள், போலீசார் பாதுகாப்போடு, கட்டடத்தை இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் காலனியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நுாலகம், படிப்பகம் கட்டி 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இதை ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகள் போலீசார் துணையுடன் எந்தவித முன்னறிவிப்பு இன்றி இடித்து விட்டனர். இதே போன்று ஊரில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டும். எங்களுக்கு மீண்டும் கட்டடம் கட்டி தரும் வரையில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.
இது குறித்து நகர அமைப்பு அலுவலர் குமார்: காலனியில் உள்ள தெருவில் ரோட்டின் கடைசி பகுதியில் படிப்பகம் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் பலமுறை நோட்டீஸ் கொடுத்துள்ளோம். நேற்று முறையாக நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டடத்தை இடித்துள்ளோம்.