ADDED : ஜன 28, 2026 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின் 7வது வார்டு ஏ.டி.பி., காம்பவுண்ட் பகுதியில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்தது.
இதனால் சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டது. அப்பகுதியினர் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கமிஷனர் விஜயகுமார், ஓரிரு நாட்களில் பிரச்னை சரிசெய்யப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.

