sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சொத்து வரியை உயர்த்தும் நகராட்சிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்

/

சொத்து வரியை உயர்த்தும் நகராட்சிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்

சொத்து வரியை உயர்த்தும் நகராட்சிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்

சொத்து வரியை உயர்த்தும் நகராட்சிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்


ADDED : செப் 27, 2024 04:58 AM

Google News

ADDED : செப் 27, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: முன்னறிவிப்பின்றி சொத்து வரியை நகராட்சி அதிகாரிகள் உயர்த்தியது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுதும் 2022--23ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. 600 சதுர அடி வரையுள்ள வீடுகளுக்கு, 25 சதவீதம், 601-1200 வரை 50 சதவீதம், 1201 முதல் 1800 வரை 75 சதவீதம், 1801 சதுரஅடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது.

வரி உயர்வை கைவிட கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆட்சேபனை மனுக்களை பெயரளவுக்கு பரிசீலனை செய்த நகராட்சி கமிஷனர்கள், அதனை தள்ளுபடி செய்து, வரி உயர்வை அமலுக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், நகராட்சி நிர்வாக இயக்குநர், அனைத்து நகராட்சி கமிஷனர்களுக்கும் ஜூலை 20ல் அனுப்பிய சுற்றறிக்கையில், தூய்மை இந்தியா, அம்ரூத் திட்டங்களுக்கு மத்திய அரசின் மானிய நிதி பெற, சொத்து வரியை உயர்த்தி வசூலிப்பது அவசியமானதாக உள்ளது.

எனவே மாநகராட்சி, நகராட்சிகளில் குறைவாக சொத்து வரி விதிப்பு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு, வரி உயர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்து நகராட்சிகளிலும், 100 ரூபாய்க்கும் குறைவாக சொத்து வரி உள்ள வீடுகள் கணக்கிடப்பட்டு வருகிறது.

நகராட்சி நிர்வாகங்கள், வீட்டின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரி விக்காமல், குறைந்தபட்சம் அரையாண்டிற்கு 500 ரூபாய் வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளன. இதனால் வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us