/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடுகளை கடைகளாக மாற்றி வரி ஏய்ப்பு செய்தோருக்கு நகராட்சிகள் கடிவாளம்
/
வீடுகளை கடைகளாக மாற்றி வரி ஏய்ப்பு செய்தோருக்கு நகராட்சிகள் கடிவாளம்
வீடுகளை கடைகளாக மாற்றி வரி ஏய்ப்பு செய்தோருக்கு நகராட்சிகள் கடிவாளம்
வீடுகளை கடைகளாக மாற்றி வரி ஏய்ப்பு செய்தோருக்கு நகராட்சிகள் கடிவாளம்
ADDED : செப் 28, 2024 02:58 AM
விருதுநகர்:தமிழகத்தில் வீடுகளை கடைகளாக மாற்றி வரி ஏய்ப்பு செய்தோருக்கு நகராட்சி நிர்வாகங்கள் கடிவாளம் போட்டுவருகின்றன.
தமிழகத்தில் மக்கள் நாளுக்கு நாள் அரசு, தனியார் பணிகளை மட்டும் நம்பியிருக்காமல் சுயதொழில் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஒரு சென்ட்டில் வீடு இருந்தால் கூட அதன் முன்பகுதியை இடித்து கடையை ஏற்படுத்தி விடுகின்றனர். இதே போல் இன்னும் இடம் இருப்பவர்கள் தனியாக கடைகளை கட்டி ஷட்டர் போட்டு வணிகம் செய்ய துவங்கியுள்ளனர்.
முன்பு நகர்ப்பகுதிகளின் முக்கிய வீதிகள் தான் கடைகள் நிறைந்து காணப்பட்டன. தற்போது குடியிருப்பு பகுதிகளிலும் கடைகள் அதிகரித்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில் கடைகளாக மாற்றுவோரை மின்வாரியத்தினர் மின் கணக்கீடு செய்யும் போதே கண்டுபிடித்து வணிக பயன்பாட்டிற்கு என மாற்றி விடுகின்றனர். ஆனால் நகராட்சி வரி வசூல் செய்ய வருவோர் அலட்சியமாக இருப்பதால் பல நகராட்சிகளில் வணிக பயன்பாட்டில் உள்ள கடைகளாக மாற்றப்பட்ட குடியிருப்புகள் இன்னும் குடியிருப்புக்கான சொத்து வரியை செலுத்தி வருகின்றன. இது நகராட்சிக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கண்டறிந்த நகராட்சி நிர்வாகங்கள் இயக்குனரகம் இதுகுறித்து பட்டியல் எடுத்து சரி செய்ய உத்தரவிட்டுள்ளது.இதன் காரணமாக நகராட்சித்துறையினர் மின் வாரியத்திடம் வணிக பயன்பாடுள்ள கட்டங்களின் பட்டியலை கேட்டு பெற்றுள்ளனர்.
வீடுகளை கடைகளாக மாற்றி வரி ஏய்ப்பு செய்தவர்களை கண்டறியும் பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர். வீடு வீடாக சென்று நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சியில் 30 ஆயிரம் வணிக பயன்பாட்டு சொத்து வரி இனங்களில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கடைகளாக மாற்றப்பட்டும் இன்னும் குடியிருப்பு வரியை செலுத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகங்களின் இந்த கடிவாளத்தால் கடைகளாக குடியிருப்புகளை மாற்றிய பலரும் தாமாக முன் வந்து வரி செலுத்த தயாராகி வருகின்றனர்.