/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடுகளில் விசைத்தறிகள் குறித்துநகராட்சிகள் கணக்கெடுப்பு
/
வீடுகளில் விசைத்தறிகள் குறித்துநகராட்சிகள் கணக்கெடுப்பு
வீடுகளில் விசைத்தறிகள் குறித்துநகராட்சிகள் கணக்கெடுப்பு
வீடுகளில் விசைத்தறிகள் குறித்துநகராட்சிகள் கணக்கெடுப்பு
ADDED : நவ 24, 2024 02:18 AM
அருப்புக்கோட்டை:வீடுகளில் உள்ள விசைத்தறி குறித்து நகராட்சிகள் கணக்கெடுக்குப்பதால் நெசவாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 4.5 லட்சம் நெசவாளர்கள் விசைத்தறி தொழிலை செய்து வருகின்றனர். இவற்றில் 3 லட்சம் நெசவாளர்கள் தங்கள் வீடுகளில் விசைத்தறிகளை வைத்து தொழில் செய்து வருகின்றனர். 10 விசைத்தறிக்கும் குறைவாக வைத்திருப்பவர்களுக்கு ஆயிரம் யூனிட் இலவச மின்சாரத்தை அரசு வழங்கி வருகிறது.ஆனாலும் நூல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி, ரக கட்டுப்பாடு, ஜவுளிகளின் தேக்கம் இவற்றால் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேங்கி கிடக்கும் ஜவுளிகளை விற்க முடியாமல் உரிமையாளர்களும் வேலை கிடைக்காமலும் நெசவாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வீடுகளில் விசைத்தறி செய்பவர்கள், ஜி.எஸ்.டி., வரி கட்டும் விசைத்தறியாளர்களின் விபரங்களை நகராட்சிகள் சேகரிக்கின்றன. இதற்கான பட்டியலை மின்வாரியத்திடம் இருந்து நகராட்சிகள் பெற்றுள்ளன. இதனால் நெசவாளர்கள் தங்களுடைய வீட்டு வரி உயரும் என்றும், தொழில் வரி கட்ட வேண்டும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
கணேசன், தமிழ்நாடு விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மதுரை மண்டல பொறுப்பாளர் :
வீடுகளில் விசைத்தறி உள்ளவர்களுக்கு தொழில் வரி, தொழிற்சாலைக்கான கூடுதல் சொத்து வரி கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வருகிறது. இதனால் நெசவாளர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படும். கூடுதலான வரிவிதிப்புகளை அரசு நிறுத்த வேண்டும் என்றார்.