/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முப்புடாதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா
/
முப்புடாதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED : அக் 13, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார்: சொக்கநாதன் புத்துார் மேலுார் துரைச்சாமிபுரம் முப்புடாதி அம்மன் வடகாசி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு பூக்குழி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொங்கல் விழா அக்.3ல் கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சுவாமி தண்டியில் சப்பரம், தட்டு சப்பரம், திருத்தேர் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பூ வளர்த்தல் நடந்தது. இதனைத் தொடர்ந்து முப்புடாதி அம்மன் தட்டு சப்பரத்தில் வீதி உலா நடந்தது. அதன் பின் பக்தர்கள் பூ இறங்கி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.