/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா
/
முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா
ADDED : அக் 31, 2024 12:59 AM
சிவகாசி: சிவகாசி, திருத்தங்கலில் கட்சிகள் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகாசி ரிசர்வ் லைன் திருத்தங்கலில் முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
* சிவகாசி மாநகர தி.மு.க.. சார்பில் மாநகர செயலாளர் உதயசூரியன், மேயர் சங்கீதா தலைமையில் முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
* மாநகர பா.ஜ., சார்பில் மாநகர செயலாளர் பாட்டகுளம் பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
சாத்துார்: சாத்துாரில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடந்தது. தெற்கு ரத வீதியிலும் அண்ணா நகரிலும் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மக்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து பாலபிஷேகம் செய்தனர்.
மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.
ஓ. மேட்டுப்பட்டி, சத்திரப்பட்டி, மேட்டமலை உள்ளிட்ட சுற்றுக் கிராமங்களில்தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மக்கள் பலர் கலந்து கொண்டனர்.