/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது பஸ் ஸ்டாண்டில் மோட்டாரை 'ஆன்' செய்துவிடும் மர்ம நபர்கள் வீணாகுது தண்ணீர்

ADDED : டிச 24, 2024 04:11 AM

விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கி நுாறு நாட்களை தாண்டியுள்ள நிலையில், இங்குள்ள மோட்டாரை மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி போட்டு விட்டு செல்வதால் தொட்டி நிரம்பி தண்ணீர் வழிகிறது.
இதை சரியாக இயக்க பூட்டும் வகையிலோ, வாட்ச்மேன் நியமித்தோ நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் 30 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருந்தது.
மாவட்ட நிர்வாகத்தின் பலதரப்பட்ட முயற்சிகளாலும், பல்வேறு தரப்பு கூட்டங்களாலும் இந்தாண்டு ஆக. 21 முதல் செயல்பட துவங்கியது.
இந்நிலையில் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்திற்கு மோட்டார் மூலம் தொட்டி அமைத்து தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை இங்கு வந்து செல்லும் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மர்மநபர்கள் சிலர் அடிக்கடி மோட்டார் சுவிட்சை போட்டு செல்கின்றனர்.
இதனால் மின் விரயம்ஆவதுடன், தொட்டியில் தண்ணீர் நிரம்பி பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் வழிகிறது. இதனால் பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் இந்த கழிப்பிடத்தின் சுவிட்ச் போர்டில் பூட்டும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.