/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவன் கோயில் நந்தி வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு --
/
சிவன் கோயில் நந்தி வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு --
சிவன் கோயில் நந்தி வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு --
சிவன் கோயில் நந்தி வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு --
ADDED : ஏப் 12, 2025 02:30 AM

ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழமையான சிவன் கோயில் பின்புற அறையில் வைக்கப்பட்டிருந்த நந்தி வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
ராஜபாளையம் மதுரை ரோட்டில் 400 ஆண்டுகள் பழமையான மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இங்கு தினசரி பக்தர்கள் வருவர். நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயில் முன்பகுதியில் மாலை 6:30 மணிக்கு தொடங்கி இரவு 9:15 வரை திருக்கல்யாண வழிபாடு நடந்தது.
இந்நிலையில் மூலஸ்தானம் பின் உள்ள அறைகளில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் இருந்து கரும்புகை எழுந்தது. திறந்தபோது மரத்தால் ஆன நந்தி வாகனத்தின் வயிற்றுப்பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பக்தர்கள் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு கிடந்த கரி மருந்துகள் உள்ள பையை தீப்பிடிக்கும் முன்பு அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
செயல் அலுவலர் ராஜேஷ் கூறுகையில், ''தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது,'' என்றார்.

