/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்டார்ட் அப் இந்தியா மூலம் அனைவரும் தொழில் முனைவோராக வேண்டும் நபார்டு இயக்குனர் ராமஸ்ரீனிவாசன் பேச்சு

ADDED : பிப் 22, 2024 05:56 AM
விருதுநகர்: தென் தமிழகம் வளர்ச்சி பெறஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் பயனடைந்து அனைவரும் தொழில் முனைவரோக வேண்டும். எனவிருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நபார்டு இயக்குனர் ராமஸ்ரீனிவாசன் பேசினார்.
இக்கல்லுாரியில் வேலைவாய்ப்பு, பயிற்சி மையம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு நடந்தது.முதல்வர் சாரதி தலைமை விகித்தார்.சத்யபாமா பல்கலை பேராசிரியர் சேதுராமன் ஸ்டார்ட்அப் இந்தியா, புதிய திட்டங்கள் உருவாக்கும் விதம் குறித்து பேசினார்.
நபார்டு இயக்குனர் ராமஸ்ரீனிவாசன் பேசியதாவது:
தொழில் முனைவோருக்காக மத்திய அரசு பல்வேறு நிதியுதவிகளை வழங்கி வருகிறது. தமிழகத்தில் தொழில் துவங்க நிறையவாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் தங்களது திறனை பயன்படுத்தி நவீன காலத்திற்கு தேவையான புதுமையான கண்டுபிடிப்புகளை வழங்கவேண்டும்.
ஸ்டார்ட் அப் இந்தியா பற்றிகல்லுாரி மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசி வருகிறேன்.புதிய தொழில் துவங்க உள்ளோருக்கு அகாடமி மூலம் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வேன்.தென் தமிழகத்தில் வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
கொடுப்போர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இப்பகுதிவளர்ச்சி பெற ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் பயனடைந்து அனைவரும் தொழில் முனைவரோக வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் உயரும், என்றார்.
மாணவர் ஹரிஹரசுதன் நன்றிக்கூறினார்.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர், வேலைவாய்ப்பு, பயிற்சி மைய அதிகாரி பவளக்குமார் செய்தார்.