/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி தன் உயிரை மாய்த்தவர்' வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு
/
'அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி தன் உயிரை மாய்த்தவர்' வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு
'அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி தன் உயிரை மாய்த்தவர்' வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு
'அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி தன் உயிரை மாய்த்தவர்' வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் பேச்சு
ADDED : ஜன 03, 2024 05:49 AM

விருதுநகர்: ''அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடி தன் உயிரை மாய்த்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்,'' என விருதுநகரில் நடந்த வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு சொற்பொழிவில் நாகாலாந்து கவர்னர் கணேசன் தெரிவித்தார்.
விருதுநகரில் நேற்று பா.ஜ., சார்பில் பாண்டிய பூமி நடத்தும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு சொற்பொழிவு விழாவிற்கு தலைமை வகித்து கவர்னர் கணேசன் பேசியதாவது:
வீரபாண்டிய கட்டபொம்மன் கடைசி தருணத்தில் கோட்டையில் தங்கியிருந்த மக்களின் நலனுக்காக கோட்டையை விட்டு வெளியேறினார்.
தன்னை சந்திக்க வரும் எதிரியான கிழக்கிந்திய கம்பெனியின் துாதுவர்களுக்கு தலைப்பாகைகட்டி மரியாதையுடன் நடத்துபவர். வெள்ளைக்காரனிடம் இருந்து ஊமைத்துரையை காப்பாற்ற சமூக வேறுபாடு கருதாது அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டனர்.
பாஞ்சாலங்குறிச்சியின் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவிற்கு பின் தாயார் ஆறுமுகம்மாள், மனைவி ஜக்கம்மா உள்பட அனைத்து உறவினர்களும், அனைத்து சமுதாய மக்களும் வெள்ளைக்காரர்களால் வஞ்சிக்கப்பட்டனர். திருச்செந்துார் கோயிலில் காலை பூஜை நடந்த செய்தியை கேட்ட பின் தான் உணவருந்தும் பழக்கம் கொண்டவர்.
வீரபாண்டிய கட்டபொம்மனை மரியாதை குறைவாக நடத்திய ஆங்கில அதிகாரியை கிழக்கிந்திய கம்பெனி பணிநீக்கம் செய்தது. போரில் 800 ஆங்கிலேயர்கள், 2 ஆங்கில அதிகாரிகளை கொன்றுகுவித்த ஒரே மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன், என்றார்.
பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் பேசியதாவது:
முகலாய மன்னர் அவுரங்கசீப் தமிழகத்தில் நுழைய முடியாத நிலைக்கு ஒரு காரணம் மன்னர் திருமலை நாயக்கர். மன்னர்கள் புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வீரமங்கை ராணி வேலுநாச்சியார், மாவீரர்கள் அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றவர்கள்.
இவர்கள் அனைவருக்கும் லண்டனில் சிலை அமைக்க வேண்டும். கோவாவின் ராணிக்கு பிறகு, தமிழகத்தில் தான் ஆங்கிலேயரை வென்ற பின் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆட்சி நடத்திய ஒரு பெண் ராணி வீரமங்கை வேலுநாச்சியார். கட்டபொம்மன் ஆத்மா பிரதமர் மோடியை ஆசிர்வதித்து கொண்டிருக்கிறது. என்றார்.
முன்னதாக வரலாற்று ஆய்வாளர் செந்தில் குமார் எழுதிய கட்டபொம்மன் நாயக்கர் விசாரணை' என்ற தலைப்புடைய நுாலின் ஒரு பகுதியை கவர்னர் கணேசன் வெளியிட திருமாறன், குணசீலன் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் தென்னிந்திய பார் வார்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., வரதராஜன், தொழிலதிபர் யோகன், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி தலைவர் குணசீலன், பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.