/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாரணாபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை : மக்கள் அவதி
/
நாரணாபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை : மக்கள் அவதி
ADDED : ஆக 21, 2025 08:26 AM
சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சி கண்ணா நகர் ,சிவன் நகர் ,பத்மா காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்ப பகுதிகளுக்கு உள்ளூர் போர்வெல் மூலமாகவும், கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழியாக சப்ளை செய்யப்படுகிறது. இப்பகுதியினருக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது அனைவருக்கும் போதுமானதாக இல்லை. இதனால் . வேறு வழி இன்றி குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதிகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

