/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய ரோபோட்டிக் போட்டி நோபிள் மாணவிகள் சாதனை
/
தேசிய ரோபோட்டிக் போட்டி நோபிள் மாணவிகள் சாதனை
ADDED : பிப் 01, 2024 05:09 AM

விருதுநகர் : டில்லியில் நடந்த தேசிய அளவிலான ரோபோட்டிக் போட்டி 3ம் இடத்தை பிடித்து வெண்கலபதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதற்கு முன் மாநில அளவில் நடந்த முதல்நிலை தேர்வில் விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி தாரணி, 8ம் வகுப்பு மாணவி தக்ஷனா பங்கேற்று தேசியபோட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதையடுத்து டில்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டில்காட்டுத் தீயால் காடுகள் அழிவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மாணவிகள் வன பாதுகாப்பு கண்காணிப்பு கருவியை ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிமைத்தனர். இதுதேசிய இறுதி போட்டியில் 3ம் இடத்தையும், வெண்கல பதக்கத்தை பெற்றது.
முதல் பரிசை ஹரியானா பள்ளி, 2ம் பரிசை உ.பி., பள்ளி, 3ம் பரிசை தமிழகத்தில் இருந்து விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலை பள்ளிவென்றுள்ளது. அடல் ஆய்வக பயிற்சி ஆசிரியை சங்கீதா, சுதாமணி, வைஷ்ணுதேவி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வழிகாட்டுதலும், பயிற்சியும் அளித்தனர்.பள்ளி தலைவர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலாளர் வெர்ஜின் இனிகோ பாராட்டினர்.