ADDED : செப் 01, 2025 02:06 AM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாநில அரசின் பொருளியல், புள்ளியியல் துறை அலுவலர்களால் 80வது தேசிய மாதிரி ஆய்வு ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பு பற்றிய விவரங்கள் குறித்து 20 நகர், 17 கிராமப்புறங்களிலும், ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025 முடிய உள்ள காலத்தில் இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு பற்றிய விவரங்கள் குறித்து 8 நகர், 8 கிராமப்புறங்களிலும் 2025 ஜூலை முதல் டிச. வரை காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு பற்றிய விவரங்கள் குறித்து 12 நகர், 7 கிராமப்புறங்களிலும் என 3 தலைப்புகளில் சமூக பொருளாதார ஆய்வு நடக்கிறது.
நேரடியாக ஒவ்வொரு வீட்டிற்கும் விவரங்களை சேகரிப்பதற்காக வரும் போது மக்கள் உண்மையான புள்ளி விவரங்களை அளித்து, வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும், என்றார்.