ADDED : மார் 01, 2024 12:07 AM

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்.,கல்வி குழுமங்களின் சார்பில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர். பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
முதலாம் ஆண்டு துறை தலைவர் செல்வராணி வரவேற்றார். கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி பேராசிரியர் தெய்வ சாந்தி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி டீன் சீனிவாசன் பேசினர்.
மாணவர்களுக்கு பேப்பர் பிரசன்டேஷன், போஸ்டர் பிரசன்டேஷன், அறிவியல் மாதிரி வடிவமைப்பு உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பேராசிரியர்கள் ஸ்ரீராம், கோபாலகிருஷ்ணன், சக்தி ஸ்ரீ செய்தனர்.

