நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:' கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் தோட்டக்கலைத் துறை சார்பில், தோட்டக்கலை உற்பத்தியை வேகப்படுத்துதல் என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசிஆனந்த் கருத்தரங்கை துவக்கி வைத்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி முன்னிலை வகித்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக டீன் ஐரின் வேதமணி, ஆராய்ச்சி கட்டுரை மலரை வெளியிட்டு பேசினார்.
கருத்தரங்கில் துறை தலைவர் விஜயகுமார், டீன் சிவகுமார், வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள், மாணவர்கள், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.