ADDED : ஆக 31, 2025 12:27 AM

சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தினவிழா நடந்தது.
டாக்டர் ராஜ ஜெயலட்சுமி மாணவிகளிடம் உடல்நலம் பேணுதல் பற்றி பேசினார். மாணவிகள் தேசிய விளையாட்டு தினத்தின் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு குழு விளையாட்டுக்கள் மற்றும் தனிநபர் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
பரிசளிப்பு விழாவில் உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி வரவேற்றார். முதல்வர் சுதா பெரிய தாய் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற அணிக்கு மேஜர் தயான்சந்த் கோப்பை வழங்கப்பட்டது. உதவி உடற்கல்வி இயக்குனர் சசிப்பிரியா நன்றி கூறினார்.
* சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக 100, மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
மாவட்டத்திலிருந்து சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், தளவாய்புரம், முகவூர், சாத்துார், விருதுநகர் ஆகிய ஊர்களில் இருந்து 43 பள்ளிகளைச் சேர்ந்த 343 மாணவர்கள் பங்கேற்றனர்.
பரிசளிப்பு விழாவில் உடற்கல்வித்துறை தலைவர் ஜான்சன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்து வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினார். உடற்கல்வித்துறை தலைவர் முருகன் நன்றி கூறினார்.