ADDED : பிப் 28, 2024 07:20 AM
சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில் நுட்ப கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாணவி வசுந்தரா தேவி வரவேற்றார். துறை தலைவர் முனிராஜ் மின்னியல் , மின்னணுவியல் துறையின் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். கல்லுாரி டீன் மாரிசாமி சிறப்பு விருந்தினரை கவுரவித்தார். இனோவல் இன்ஜினியரிங் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் முதன்மை பொறியாளர் அருண் பிரகாஷ், மாணவன் அப்துல் அஜீஸ் பேசினார்.
பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 423 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி மஞ்சுளா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கார்மல் சோபியா, கோகிலா, இணை ஒருங்கிணைப்பாளர் சரத் சந்திரன், ஆசிரியர்கள் செய்தனர்.

