தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடுவது எப்போது

தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடுவது எப்போது

தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடுவது எப்போது


UPDATED : அக் 15, 2026 05:57 PM

ADDED : அக் 15, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 05:57 PM ADDED : அக் 15, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்து மாதங்கள் பல கடந்தும் இதுவரை விபரங்கள் வெளியிடப்படவில்லை. மத்திய அரசின் இந்த தாமதத்தால் புதிதாக அமைந்த மாநில அரசுகளில் கால்நடைத்துறைக்கான திட்டங்கள் வகுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. 2019ல் 20வது கணக்கெடுப்பு பணிகள் நடந்த நிலையில், கடந்தாண்டு அக்., இறுதியில் 21வது தேசிய கால்நடை கணக்கெடுப்பு பணிகள் துவங்கின.

வட மாநிலங்களில் டாக்டர்கள், கணக்கெடுப்பாளர்களின் பணிகளில் தாமதம் ஏற்பட்டு திட்டமிட்டப்படி 2025 பிப்., இறுதியில் கணக்கெடுப்பை முடிக்க முடியாத நிலை உருவானது.

இதனால் மார்ச் இறுதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு மாநிலங்களில் இருந்து மத்திய அரசிடம் அனைத்து விபரங்களும் சமர்பிக்கப்பட்டது.

ஆனால் பணிகள் முடிந்து மாதங்கள் பல கடந்தும் இதுவரை கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்படவில்லை. இதனால் புதிதாக அமைந்துள்ள மாநில அரசுகள் கால்நடைத்துறைக்கான திட்டங்களை வகுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் 5 ஆண்டுகளுக்கு முந்தைய கணக்கெடுப்பு விபரங்களை வைத்து தடுப்பூசி பணிகள், பருவமழை தற்காப்பு நடவடிக்கைள் எடுக்கப்படுகின்றன. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கணக்கெடுப்பு விபரங்கள் அவசியமாகிறது.

எனவே தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு விபரங்களை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us