/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தேசிய இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாடு
/
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தேசிய இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாடு
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தேசிய இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாடு
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் தேசிய இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாடு
ADDED : ஆக 12, 2025 11:28 PM
சிவகாசி: தேசிய அளவிலான இளைஞர் வானியல், விண்வெளி அறிவியல் மாநாடு 2025 ஆக. 15 முதல் ஆக. 17 வரை சிவகாசி காளிஸ்வரி கல்லுாரியில் நடக்கிறது.
இந்த மாநாட்டை தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட வானியல் அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
மாநாட்டிற்கு முன்னோட்டமாக, தமிழ்நாடு முழுவதும் 10 மண்டல மாநாடுகள் நடத்தப்பட்டு, சிறந்த திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. மாநில மாநாட்டில் 170 சிறந்த அணிகள் தங்கள் புதுமையான வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் திட்டங்களை வழங்க உள்ளனர்.
நாட்டின் சிறந்த விஞ்ஞானிகள் குழு, இத்திட்டங்களை மதிப்பீடு செய்து சிறந்த அணிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த வானியல் அறிவியல் மாநாட்டில் டாக்டர் தில்லிபாபு, மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, காளீஸ்வரி கல்லுாரி செயலர் செல்வராஜன், உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் மாநிலம் முழுவதும் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில், நேரடி அறிவியல் செயல்பாடுகள், தொலைநோக்கி அணிவகுப்பு, அறிவியல் செய்முறை விளக்க காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் இரவு வானை வண்ணமயமாக்கும் வானவேடிக்கைகள் நடைபெறும், என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.