ADDED : அக் 05, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி முக்கு ரோடு கல்யாண கணபதி, மாரியம்மன், சந்தன கருப்பசாமி கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது.
முதல் நாளான நேற்று முன்தினம் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜைகள் நடந்தன.
ஊஞ்சலில் அம்மன் ராஜராஜேஸ்வரி கோலத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நாகர் விளக்கு, சிங்கமுக விளக்கு, கும்ப விளக்கு, பஞ்சமுக விளக்கு உட்பட பல்வேறு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கொலுவிற்கும் தீபாராதனைகள் நடந்தது.
தூரியில் அம்மனை லாலிபாடியும், வெண்சாமரம் வீசியும் பக்தர்கள் வணங்கினர்.