ADDED : செப் 25, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொலு உற்ஸவம் துவங்கியது.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், அவரது மனைவி சசிகலா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பள்ளிகள், கல்லுாரி, உறவின்முறை சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். ஏராளமான பொம்மைகள் கொலுவில் வைக்கப்பட்டுள்ளது.
அமுதலிங்கேஸ்வரர் கோயில் டிரஸ்டி கணேசன், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயலர் காசிமுருகன், தலைவர் ஜெய்கணேஷ், பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலர் ராம்குமார், துவக்கப்பள்ளி செயலர் சௌந்தரபாண்டியன், கல்லுாரி செயலர் சங்கரசேகரன் மற்றும் பள்ளி கல்வி நிர்வாகிகள் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.