sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புதிய பஸ் வழித்தடங்களை உருவாக்குவது அவசியம்

/

புதிய பஸ் வழித்தடங்களை உருவாக்குவது அவசியம்

புதிய பஸ் வழித்தடங்களை உருவாக்குவது அவசியம்

புதிய பஸ் வழித்தடங்களை உருவாக்குவது அவசியம்

3


UPDATED : ஏப் 13, 2025 08:06 AM

ADDED : ஏப் 13, 2025 04:24 AM

Google News

UPDATED : ஏப் 13, 2025 08:06 AM ADDED : ஏப் 13, 2025 04:24 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மாவட்டத்தில் 9 டெப்போக்கள் மூலம் 400க்கும் மேற்பட்ட பஸ்கள், நான்கு வழிச்சாலை, தேசிய, மாநில, கிராமப்புற சாலை வழித்தடங்களில் இயங்கி வருகிறது.

ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள், வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். போதிய பஸ் வசதி கிராமப்புறங்களில் இல்லாததால் நகர் பகுதியில் தங்கள் பணியிடங்களுக்கு வேலைக்கு டூவீலரில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் டூவீலர் விபத்துகளும், உயிர்பலிகளும், உடல் ஊனம் ஏற்படும் நிலை தினமும் நடந்து வருகிறது.

குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து சிவகாசி, திருத்தங்கல், ஆமத்தூர், விருதுநகர், பாலவநத்தம் வழியாக அருப்புக்கோட்டை வரை உள்ள வழித்தடத்தில் பல கல்லூரிகளில் பல ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் சிரமமின்றி வந்து செல்ல போதிய அளவிற்கு டவுன் பஸ்கள் இல்லாமல் படிகளில் தொங்கிக் கொண்டு பயணிக்கின்றனர்.

இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கல்லூரியில் 900க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில் 3 அரசு பஸ் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் டூவீலர்களில் பயணித்து விபத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கல்லூரி வழித்தடங்களில் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்.

இதே போல் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தினமும் தங்களது தொழில், கல்வி, வேலை வாய்ப்புக்காக நகர் பகுதிக்கு வந்து செல்ல போதிய பஸ்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் குக்கிராமங்களில் உள்ள மக்கள் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நகரங்களுக்கு செல்ல இரண்டு பஸ்கள் மாற வேண்டிய நிலையும் காணப்படுகிறது. இதனால் புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பெருமாள் தேவன்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை, சிப்பி பாறை, வழியாக கோவில்பட்டி வழித்தடத்தில் ஒரே ஒரு தனியார் பஸ் மட்டுமே இயங்குகிறது.

இதுவரை ஒரு அரசு பஸ் கூட இயங்கப்படவில்லை. எனவே இந்த வழித்தடத்தில் அரசு பஸ் இயக்குவது அவசியம். மேலும் ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ஆயர் தர்மம் வரை செல்லும் டவுன் பஸ் பேரையூர் வரை தடநீட்டிப்பு செய்ய வேண்டும். இதேபோல் வெம்பக்கோட்டை, திருவேங்கடம், தேவிபட்டினம், மாங்குடி பகுதிகளுக்கும் இயக்க வேண்டும்.

ராஜபாளையத்திலிருந்து தளவாய்புரம், முகவூர் வழியாக சங்கரன்கோவில், சிவகாசியில் இருந்து எரிச்சநத்தம் வழியாக பேரையூர், சாத்தூரில் இருந்து கன்னி சேரி, திருத்தங்கல் வழியாக சிவகாசி, விருதுநகரில் இருந்து மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், காரியாபட்டியில் இருந்து மதுரை ஆரப்பாளையம், அருப்புக்கோட்டையில் இருந்து காரியாபட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி வழியாக தேனி ஆகிய புதிய வழித்தடங்களில் டவுன் பஸ்கள், ரூட் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட தொகுதி மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.






      Dinamalar
      Follow us