ADDED : ஏப் 15, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார், தீ தடுப்புக் குழு உதவி அலுவலர் தாமோதரன், நிலைய உதவி அலுவலர் பாலமுருகன் ஆகியோர் பணியில் உயர்நீத்த தீயணைப்பு பணியாளர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
* சாத்துார்,வெம்பக்கோட்டை தீயணைப்பு ,மீட்பு துறை சார்பில் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
* திருச்சுழி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வீரர்களின் திரு உருவ படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.