/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அலட்சியம்: விஷ பூச்சிகளின் புகலிடமாக அரசு பள்ளிகள்: சுத்தம், பராமரிப்பு பணிகள் அத்தியாவசியம்
/
அலட்சியம்: விஷ பூச்சிகளின் புகலிடமாக அரசு பள்ளிகள்: சுத்தம், பராமரிப்பு பணிகள் அத்தியாவசியம்
அலட்சியம்: விஷ பூச்சிகளின் புகலிடமாக அரசு பள்ளிகள்: சுத்தம், பராமரிப்பு பணிகள் அத்தியாவசியம்
அலட்சியம்: விஷ பூச்சிகளின் புகலிடமாக அரசு பள்ளிகள்: சுத்தம், பராமரிப்பு பணிகள் அத்தியாவசியம்
ADDED : ஜூன் 02, 2025 12:29 AM

மாவட்டத்தில் முழு ஆண்டு பரீட்சை முடிந்து, 2 மாதங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விடுமுறையில் அரசு பள்ளிகள் பராமரிப்பின்றி தூசி படிந்து, குப்பைகள் நிறைந்து இருக்கும். பள்ளி நாட்களில் கூட பெரும்பாலான பள்ளிகளில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் இருக்கும்.
கோடை விடுமுறையில் புழக்கம் இல்லாமல் இருந்ததால் விஷ பூச்சிகள் அதிகம் குடியிருக்க வாய்ப்பு உள்ளது. பள்ளிகள் திறந்ததும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த வகுப்பில் சேர்வதற்கு ஆர்வமாக இருப்பர். ஆசிரியர்களும் மாணவர்களின் சேர்க்கையில் மும்முராக இருப்பர். பள்ளி வளாகத்தில் என்ன சூழ்நிலை இருக்கிறது என்பதை கூட கவனிக்க நேரம் இருக்காது.
மாணவர்களும் பயமின்றி வளாகத்தில் சுற்றி வருவர். மற்ற விஷயங்களை பற்றி மாணவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கோடையில் ஆங்காங்கே அவ்வப்போது பரவலாக நல்ல மழை பெய்தது.
மழைக்கு அனைத்து இடங்களிலும் செடிகள் முளைத்து புதர்மண்டி கிடப்பதுடன், விஷ பூச்சிகளின் புகலிடமாக மாறி இருக்கும். மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
அது மட்டுமல்ல பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளையும் பராமரிக்க வேண்டும். ஆங்காங்கே குப்பை தேங்கி அசுத்தமாக கிடக்கும். அதற்குள் சிறிய அளவிலான விஷப்பூச்சிகள் தங்கி இருக்கும். அதன் மீது நடந்து செல்லும் மாணவர்களை தீண்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனை தூய்மைப்படுத்த வேண்டும். கழிப்பறைகள் சுகாதாரம் இல்லாமல் இருக்கும். அதனை சுத்தம் செய்ய வேண்டும்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளி திறந்தது முதல் மாதந்தோறும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய, பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த, பராமரிப்பு பணிகளை செய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.