/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அலட்சியம்: ஓட்டல்களில் பார்சலுக்கு பாலிதீன் பயன்பாடு: கண்காணிப்பில்லாத உணவு பாதுகாப்பு துறை

ADDED : ஜன 20, 2024 04:12 AM
ராஜபாளையம்: ஓட்டல்களில் சமீப காலமாக வாழை இலைக்கு பதில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்பாடு அதிகரித்து வருவதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணித்து தடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஓட்டல்களில் உணவிற்கு பயன்படுத்தும் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இலையை விட குறைவான விலையில் கிடைப்பதால் ஓட்டல்களிலும், ரோட்டோர கடைகளிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வயிற்று உபாதை தொடங்கி பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ராஜபாளையம் மெயின் பஜார், தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே பீடர் ரோடு, சத்திரப்பட்டி ரோடு பகுதி பெரும்பாலான ஓட்டல்களில் பிளாஸ்டிக் இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கொதிக்கும் நிலையில் உள்ள உணவு பண்டங்கள் சால்னா, குருமா போன்றவற்றையும் சுட சுட பிளாஸ்டிக் கவர்களில் கட்டி பார்சல் செய்கின்றனர்.
இவற்றின் தொடர் பயன்பாடு என்பது கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு வித்திடும் என்பது தெரிந்தும் வாடிக்கையாளர்கள் தட்டிக் கேட்க முடிவதில்லை.
சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் இச்சட்டமே கேலிக்கூத்தாக மாறி வருகிறது.
முந்தைய காலங்களில் அடிக்கடி எச்சரிக்கை விடுவதும் கண்காணித்து அபராதம் விதிப்பது என தொடர்ந்ததால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
அரசு அறிவித்துள்ள விதிகளின் கீழ் உணவு தயாரிப்பு மற்றும் ஹோட்டல்களில் நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.