தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சோலார் பேனல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அலட்சியம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு மின் கட்டண செலவு அதிகமாகுது

சோலார் பேனல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அலட்சியம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு மின் கட்டண செலவு அதிகமாகுது

சோலார் பேனல்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அலட்சியம் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு மின் கட்டண செலவு அதிகமாகுது


UPDATED : நவ 03, 2026 04:50 AM

ADDED : நவ 03, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 04:50 AM ADDED : நவ 03, 2026 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்காக சோலார் பேனல்கள் நிறுவப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளை கடந்தும் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் இதுவரை முழு பயன்பாட்டுக்கு வராததால் அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை உருவாகியுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன.12ல் திறக்கப்பட்டது. கல்லுாரியின் முக்கிய தேவையான மின்சாரத்தை கல்லுாரி வளாகத்திலே உற்பத்தி செய்வதற்காகவும், கட்டணத்தை குறைப்பதற்காகவும் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால் அரசு மருத்துவக்கல்லுாரி திறந்து 4 ஆண்டுகளை கடந்தும் இதுவரை சோலார் பேனல்கள் எதுவும் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவகல்லுாரி நிர்வாகம் இந்த சோலார் பேனல்களை எப்போது முழு பயன்பாட்டுக்கு கொண்டுவருவீர்கள் என பொதுப்பணித்துறையிடம் கேட்கும் போது எல்லாம் பணிகளை துவங்கி விடுகிறோம் என தெரிவித்து வந்த நிலையில் தற்போது எங்களால் இப்பணிகளை செய்ய இயலாது என தெரிவித்து விட்டனர். இயற்கை பேரிடர் காலங்களில் மின்தடை ஏற்படும் போது மருத்துவ மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் அனைத்து சோலார் பேனல்களையும் உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை மின் செயற்பொறியாளர் மணிவண்ணன் கூறியதாவது: சோலார் பேனல்களை முழு பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான பணிகள் நடக்கிறது. விரைவில் பணிகள் துவங்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us