/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விடுபட்ட ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் தேவை புதிய அம்ரித் பாரத் திட்டம்; எம்.பி.க்கள் குரல் கொடுக்க எதிர்பார்ப்பு

ADDED : மார் 21, 2025 11:30 PM
ஸ்ரீவில்லிபுத்துார்; தமிழகத்தில் தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட சில ரயில்வே ஸ்டேஷன்களில் நடக்கும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்கவும், விடுபட்ட ஸ்டேஷன்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தி அடிப்படை வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும் எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டில் அதிக வருவாய், பாரம்பரிய நகரங்கள், முக்கிய வழித்தடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ரயில்வே கோட்டத்திற்கு 15 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு தேவையான அனைத்து வசதிகள் செய்ய 2023ல் அம்ரித் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்படி தமிழகத்தில் 32 ரயில்வே ஸ்டேஷன்களும், அதில் மதுரை ரயில்வே கோட்டத்தில் பழநி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர், பரமக்குடி, காரைக்குடி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், தென்காசி உட்பட 15 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நவீனமயமாகி வருகிறது.
இந்த ரயில்வே ஸ்டேஷன்களில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் ஒரு சில பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. இதனை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியம். மேலும் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தங்கள் தொகுதிகளில் விடுபட்ட ரயில்வே ஸ்டேஷன்களையும் சீரமைத்து வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள இரண்டாம் கட்ட அம்ரித்பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவும் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்.
ரயில்வே வளர்ச்சித் திட்டங்களை பொறுத்தவரை கேரளா எம்.பி.க்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர். தமிழக எம்.பி.க்களும் தொடர்ந்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் மற்றும் ரயில்வே வாரிய அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.