ADDED : டிச 05, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் புல்வாய் பட்டி, பெத்து ரெட்டிபட்டியில் புதிய ஊராட்சி அலுவலகம், கரிசல்பட்டி, நல்லமுத்தன்பட்டியில் துணை சுகாதார மையம், என். சுப்பையா புரத்தில் பயணியர் நிழற்குடை, பெரிய ஓடைப்பட்டியில் கலையரங்கத்தையும் திறந்து வைத்தார்.
மேலும் சங்கராபுரம், பெத்துரெட்டிபட்டி, விளையாட்டு, மீனாட்சிபுரம், பகுதியில் பயணியர் நிழற்குடைக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஊராட்சி தலைவர்கள் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.