ADDED : மார் 24, 2025 06:16 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து மண்டலத்திற்கு புதிதாக பெறப்பட்ட 13 பஸ்களின் சேவை துவக்க விழா பழைய பஸ் ஸ்டாண்டில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் நடந்தது.
இந்த பஸ்கள் விருதுநகர் -- காரியாபட்டி, விருதுநகர் - -அருப்புக்கோட்டை, சாத்துார் -- கோட்டூர், அருப்புக்கோட்டை - - நாகலாபுரம், அருப்புக்கோட்டை -- இருக்கன்குடி, சிவகாசி -- சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் -- சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார் -- இலந்தைகுளம், ராஜபாளையம் -- ஆலங்குளம் சிமென்ட் ஆலை, ராஜபாளையம் - - இனாம்கோவில்பட்டி, காரியாபட்டி -- விருதுநகர், காரியாபட்டி -- நரிக்குடி, கான்சாபுரம் -- வத்திராயிருப்பு -- ஸ்ரீவில்லிப்புத்துார் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
இதில் கலெக்டர் ஜெயசீலன், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், அசோகன், ரகுமான், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல மேலாண்மை இயக்குனர் சிங்காரவேலு, விருதுநகர் அரசு போக்குவரத்து மண்டல பொது மேலாளர் துரைச்சாமி, விருதுநகர் நகராட்சித் தலைவர் மாதவன், செய்தி, மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனர் தங்கவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.