/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறப்பு
/
புதிய பஸ் ஸ்டாண்ட் விரைவில் திறப்பு
ADDED : செப் 02, 2025 11:38 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்துாரில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் செப். 30ல் திறப்பதற்கு நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் நான்கு வழிச்சாலையின் கீழ் பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது கடைகள், ஓட்டல்கள், வாகன காப்பகம், சுகாதார வளாகம் போன்ற கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் பஸ் ஸ்டாண்டை சுற்றி காம்பவுண்ட் சுவரும், தரைதளத்தில் ரோடும் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இப்பணிகளை விரைந்து முடித்து பஸ் ஸ்டாண்டினை செயல்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் கூறுகையில், புதிய பஸ் ஸ்டாண்டில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளது. தரைத்தளம் அமைக்கும் பணி நடக்கிறது. செப். 30ல் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.