/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது பஸ் ஸ்டாண்ட் ரோடு -ரூ.7 கோடியில் விரிவாக்கம் --ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு

ADDED : ஆக 21, 2025 08:28 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான சாலை விரிவாக்க பணிக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சாலையோர மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து சப்- கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ராஜபாளையம்- திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் அடிக்கடி விபத்து உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இதில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு, பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்படும் கசிவு போன்றவைகளால் சாலை சேதம் ஆகி குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
அடிக்கடி ஏற்படும் இப் பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வாக மண், தார் கலவை போட்டு சமாளிப்பதுடன், ஒட்டு பணிகளால் இப்பகுதியை கடக்கும் அனைத்து வாகன ஓட்டிகளும் பிரச்சனையை சந்தித்து வந்தனர்.
புதிதாக சாலைப் பணிகளை மேற்கொள்வதுடன் சாலையை விரிவாக்கம் செய்ய பரிந்துரையின் பேரில் நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த மரங்கள், ஆக்கிரமிப்புகள் குறித்து சிவகாசி சப் கலெக்டர் முகமது இர்பான் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் ராஜீவ் காந்தி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் உமாதேவி உடன் இருந்தனர்.