/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் மே முதல் வாரத்தில் திறக்க வாய்ப்பு
/
மாவட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் மே முதல் வாரத்தில் திறக்க வாய்ப்பு
மாவட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் மே முதல் வாரத்தில் திறக்க வாய்ப்பு
மாவட்டத்தில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் மே முதல் வாரத்தில் திறக்க வாய்ப்பு
ADDED : மார் 22, 2025 05:56 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் ஸ்டாண்ட், ராஜபாளையம் ,அருப்புக்கோட்டையில் இடித்து கட்டப்பட்ட பழைய பஸ் ஸ்டாண்டுகள் மே மாதம் முதல் வாரத்தில் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் நீதிமன்றம் அருகே நான்கு வழிச்சாலையின் கீழ் பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடைகள் கட்டப்பட்டு டெண்டர்கள் விடப்பட்டுள்ளது.
தற்போது வடக்கு ,கிழக்கு பகுதியில் காம்பவுண்டு சுவர் கட்டும் பணியும், பஸ்கள் நிற்கும் இடத்தில் நிழற்குடை அமைக்கும் பணிகளும் துவங்கியுள்ளது.
இப்பணிகள் முடிவு அடைந்தவுடன் தார் ரோடு அமைக்கப்பட உள்ளது.
இது போல் ராஜபாளையத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டையிலும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த மூன்று நகரங்களிலும் ஏப்ரல் கடைசிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ல் முடிவடையும் நிலையில் மே முதல் வாரத்தில் புதிய பஸ் ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நகராட்சி அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.