/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
/
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சதுரகிரியில் அமாவாசை வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED : டிச 31, 2024 04:18 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை 6:30 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
கோயிலில் மதியம் 12:00 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தனமாகலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசித்தனர்.
வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.