ADDED : செப் 25, 2025 04:54 AM

விருதுநகர்: விருதுநகரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் எல்லையை வேறு ஊராட்சிக்கு மாற்றியதை ரத்து செய்ய வலியுறுத்தி அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம், கிழக்கு மாவட்ட செயலாளர் குணம், சாத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி உள்பட பலர் பங்கேற்றனர்.
கிருஷ்ணசாமி பேசுகையில், எல்லை பிரச்னை இரு கிராமங்களுக்கான பிரச்னையாகவும், ஜாதி பிரச்னையாகவும் உருவாகியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரப்படி வரையறை செய்து இருக்கன்குடி ஊராட்சிக்குள் மாரியம்மன் கோயில் சர்வேயை ஒரு மாதத்திற்குள் கலெக்டர் சேர்க்க வேண்டும், என்றார்.
இளைஞரணி செயலாளர் ஷியாம் பேசுகையில், நீதிபதி ஒருவர் ஆய்வு செய்தால் மாரியம்மன் கோயில் எந்த பகுதிக்கு சொந்தம் என தெரிந்துவிடும், என்றார்.