/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வழி காணுமா அரசுபுஞ்சை, நஞ்சை நிலங்களை அளவீடு செய்ய வீடு கட்டியவர்களுக்கு நத்தம் பட்டா வழங்க
/
வழி காணுமா அரசுபுஞ்சை, நஞ்சை நிலங்களை அளவீடு செய்ய வீடு கட்டியவர்களுக்கு நத்தம் பட்டா வழங்க
வழி காணுமா அரசுபுஞ்சை, நஞ்சை நிலங்களை அளவீடு செய்ய வீடு கட்டியவர்களுக்கு நத்தம் பட்டா வழங்க
வழி காணுமா அரசுபுஞ்சை, நஞ்சை நிலங்களை அளவீடு செய்ய வீடு கட்டியவர்களுக்கு நத்தம் பட்டா வழங்க
ADDED : பிப் 10, 2020 05:10 AM
நரிக்குடி:புஞ்சை, நஞ்சை நிலங்களில் வீடு கட்டியவர்களுக்கு அளவீடு செய்து புஞ்சை, நஞ்சை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. வருவாய் கணக்கில் நத்தமாக மாற்றி பட்டா வழங்காததால், பிற்காலத்தில் உரிமை கொண்டாட முடியாதோ என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது. புதிய திட்டம் ஏற்படுத்தி அளவீடு செய்து நத்தமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மாவட்டத்தில், கிராம குடியிருப்பு மனைகள், விவசாயமில்லாத நிலங்களை, நத்தம் நிலவரி திட்டம் அமுல் செய்து மனைவரி விதித்து, தோராய பட்டா வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் 5, 10 ஆண்டுக்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. காலப் போக்கில் இத்திட்டம் மாற்றப் பட்டு, 1992ம் ஆண்டு நத்தம் நிலவரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அதற்கு பின் மக்கள் தொகை பெருக்கத்தால் புஞ்சை, நஞ்சை நிலங்களில் குடியிருப்புகள் பெருகி விட்டன. வருவாய் கணக்கில் புஞ்சை, நஞ்சை என தொடர்ந்து வருகிறது. புஞ்சை, நஞ்சை நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளுக்கு அரசு விதிமுறைப்படி வரன்முறைப்படுத்தப்படாமல் உள்ளதால், அரசு விதிப்படி ஒப்புதல் ரசீது போட முடியாது.
நேற்று முன்தினம் கூட இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு காலியிடங்கள் இருந்தால் மட்டுமே பட்டா வழங்க வேண்டு மென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஓடை, புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி இருந்தால் அரசு விதிப்படி ஆக்கிரமிப்பு என அவற்றை காலி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். அதேபோலத்தான் புஞ்சை, நஞ்சை நிலங்களில் கட்டப்பட்ட வீடுகளை எதிர்காலத்தில் உரிமை கொண்டாட முடியாது என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையை மாற்ற அரசு புதிய திட்டம் ஏற்படுத்தி, குடியிருப்புகள் உள்ள பகுதியை கணக்கெடுப்பு நடத்தி அளவீடு செய்து, நத்தம் நிலமாக வருவாய் கணக்கில் மாற்றி நத்தம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
புதிய திட்டம் அவசியம்
5, 10 ஆண்டுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தி, கிராம குடியிருப்பு மனைகள், விவசாயமற்ற நிலங்களில் கட்டப்பட்ட மனைகளுக்கு மனைவரி விதிக்கும் திட்டத்தின்கீழ், கணக்கெடுப்பு நடத்தி நத்தம் பட்டா வழங்கி, வருவாய் கணக்கில் பதிவு செய்தனர். தற்போது இந்த திட்டம் இல்லாததால், நஞ்சை, புஞ்சை நிலங்களில் வீடு கட்டியவர்களுக்கு அரசு விதிமுறைப்படி பார்த்தால் அதனை உரிமை கொண்டாட முடியாது.
பல்வேறு திட்டங்களின் மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. நஞ்சை, புஞ்சை நிலங்களுக்கு எதிர்காலத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் அனைவருக்கும் கலக்கமாக உள்ளது. புதிய திட்டத்தின் மூலம் கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுந்தரகணபதி, சமூக ஆர்வலர், அச்சங்குளம்