/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிடி ஆயோக் விருது கலெக்டருக்கு பாராட்டு
/
நிடி ஆயோக் விருது கலெக்டருக்கு பாராட்டு
ADDED : மே 22, 2025 12:09 AM
விருதுநகர்: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, கலெக்டர் ஜெயசீலன் சந்தித்து மத்திய அரசின் நிடி ஆயோக் விருது, ரூ.3 கோடியை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
நேற்று விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் முன்னேற விழையும் மாவட்டங்களில் இந்திய அளவில் சுகாதாரம், ஊட்டச்சத்து முன்னேற்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசின் நிடி ஆயோக் மூலம் வழங்கப்பட்ட விருது, ரூ.3 கோடி பரிசுத் தொகைக்கான பாராட்டு சான்றிதழை காண்பித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
ஆரம்ப சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி தாய், குழந்தை ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய, பொது சுகாதாரத்துறை விரு கேர் என்ற மாவட்ட தாய், சேய் கண்காணிப்பு மையத்தை துவங்கியது. கர்ப்பிணி முதல் குழந்தை பிறந்து 5 வயது வரை தொடர்ந்து அவர்களது உடல் நலத்தில் அக்கறையுடன் செவிலியர்கள் மருத்துவர்கள் குழு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்குகின்றனர். 2024ல் விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பணி இறப்பு ஏதும் இல்லாத நிலையை அடைந்தும், பெண்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்துவதில் முன்னோடியாக விருதுநகர் திகழ்வதாகவும் நிடிஆயோக் பாராட்டியுள்ளது.