/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நதிக்குடியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை ஸ்டாலின் முகாமில் பெண் ஆதங்கம்

ADDED : நவ 06, 2025 07:05 AM
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நதிக்குடியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து 2 ஆண்டுகளாக மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சித்ரா என்பவர் தெரிவித்தார்.
வெம்பக்கோட்டை அருகே கொங்கலாபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இதில் கலெக்டர் சுகபுத்ரா, சாத்துார் எம்.எல்.ஏ., ரகுராமன் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தை சேர்ந்த 10 க்கும் மேற்பட்டோர், அரசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 40 சென்ட் நிலத்தை மீட்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர். மனு அளித்த நதிக்குடியைச் சேர்ந்த சித்ரா,''தனி நபர் ஒருவர் அரசு நிலைத்தை ஆக்கிரமித்து வைத்து வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நுாற்றுக்கணக்கான மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. . மக்களுக்கு இருக்கும் அக்கறை கூட அரசு அலுவலர்களுக்கு இல்லை ,''என்றார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்த வீடியோ பரவி வருகிறது.