sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குடிநீர் இல்லை, சேதமான மேல்நிலைத் தொட்டி-- இ.எஸ்.ஐ., காலனி மக்கள் தவிப்பு

/

குடிநீர் இல்லை, சேதமான மேல்நிலைத் தொட்டி-- இ.எஸ்.ஐ., காலனி மக்கள் தவிப்பு

குடிநீர் இல்லை, சேதமான மேல்நிலைத் தொட்டி-- இ.எஸ்.ஐ., காலனி மக்கள் தவிப்பு

குடிநீர் இல்லை, சேதமான மேல்நிலைத் தொட்டி-- இ.எஸ்.ஐ., காலனி மக்கள் தவிப்பு


ADDED : ஜூலை 11, 2025 02:57 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: வீட்டிற்கு குழாய் இருந்தும், குடிநீர் இல்லாத சூழல், தெருக்களில் விடுபட்ட ரோடுகளால் வாகன ஓட்டிகள் தவிப்பு, குடியிருப்பு இடையே பன்றிகள் உலா என எண்ணற்ற பிரச்சனைகள் சிக்கி தவிக்கின்றனர் ராஜபாளையம் தெற்கு வெங்கநல்லுார் ஊராட்சி இ.எஸ்.ஐ காலனி மக்கள்.

ராஜபாளையம் அருகே மலையை ஒட்டி தெற்கு வெங்காநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட இ.எஸ்.ஐ., காலனியில் அடிப்படை வசதியான குடிநீருக்கு குழாய்கள் அமைத்தும் தண்ணீர் சப்ளை இல்லை. இதனால் விலைக்கு குடிநீர் வாங்கி உபயோகிக்கின்றனர்.

குடியிருப்பு அருகே இ.எஸ்.ஐ., மருத்துவமனை முன் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடியும் தருவாயில் உள்ளது. புகார் அளித்தாலும் பராமரிப்பு என்ற பெயரில் கண் துடைப்பு நடைபெறுகிறது. மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் குப்பையை முறையாக அகற்றாமல் கழிவுகளை குவித்து தீ வைக்கப்படுகிறது.

வாறுகால் முழுவதும் சிதிலமடைந்து கழிவுகள் அடைத்து நிற்கின்றன. லேசான மழைக்கும் சாக்கடை கழிவுகள் ரோட்டில்ஓடி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குடியிருப்பு அருகே பன்றி வளர்ப்பதால்தெருக்களில் திரியும் நிலையில் தொற்றுநோய் அபாயம் உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் பி.டி.ஓ.,க்களிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மலையில் திறந்தவெளி


மாரிச்செல்வி, குடும்பத் தலைவி: பெரும்பாலான தொழிலாளர்கள் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அருகில் உள்ள மலைப்பகுதியில் திறந்த வெளியாக உபயோகிக்கின்றனர். நடவடிக்கை வேண்டும்.

விலைக்கு வாங்கும் குடிநீர்


ஸ்ரீதேவி, குடும்பத் தலைவி: நகராட்சி அருகே இருந்தும் குடிநீருக்கு வழி இல்லாததால் குடம் ஒன்று ரூ.12 என விலை கொடுத்து வாங்கி வருகிறோம். வசதி இல்லாதவர்கள் வெகு தொலைவிற்கு குடங்களை துாக்கி அலைய வேண்டியுள்ளது.

குப்பை எரிப்பால் சிக்கல்


-சத்யா தேவி, குடும்பத் தலைவி: வாரம் ஒரு முறை வாங்கப்படும் குப்பை மலையை ஓட்டி பகுதியிலேயே குவிக்கப்படுகிறது. கலங்கா பேரி ரோட்டில் தியேட்டர் அருகிலும் குவித்து தீ வைப்பதால் சுற்றி உள்ளவர்கள் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

விபத்து அபாயம்


வைரம், குடியிருப்பாளர்:30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி துாண்களில் கம்பி வெளியே தெரிந்தும், நீர் கசிவு ஏற்பட்டு சிதிலமடைந்து காணப்படுகிறது. புகார் தெரிவித்தாலும் மேம்போக்காக பழுது பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us