/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மொழி தெரியாத தொழிலாளர்களுக்கு மணி மருந்து கலவை பணி வேண்டாம்
/
மொழி தெரியாத தொழிலாளர்களுக்கு மணி மருந்து கலவை பணி வேண்டாம்
மொழி தெரியாத தொழிலாளர்களுக்கு மணி மருந்து கலவை பணி வேண்டாம்
மொழி தெரியாத தொழிலாளர்களுக்கு மணி மருந்து கலவை பணி வேண்டாம்
ADDED : ஆக 12, 2025 11:29 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் மொழி தெரியாத புலம்பெயர் தொழிலாளர்களை மணி மருந்து கலவை கூடங்களில் பணியமர்த்த வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
பட்டாசு விபத்துக்கள் நடந்த பிறகு தான் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த ஆலைகளுக்கு ஆய்வு செல்லும் போக்கு என்பது உள்ளது. சாத்துார் அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் 27 பேர் உயிரை குடித்த உள்குத்தகை இன்று வரை பட்டாசு ஆலைகளை விட்டு போகாத பேயாக உள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக பட்டாசு ஆலைகளில் வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது அதிகரித்து வருகிறது. அவர்கள் கூலி அதிகம் கேட்காத காரணத்தால் இவ்வாறு செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மொழி பற்றிய தெளிவு இல்லாத தொழிலாளர்களை வெடி விபத்து அதிகம் நடக்க வாய்ப்புள்ள கூடங்களில் பணிக்கு பயன்படுத்துவதால் விபத்து அபாயம் அதிகம் உள்ளது. இதை தவிர்ப்பதை ஆய்வுகளில் உறுதி செய்ய வேண்டும்.
மாதம் ஒரு முறை அரசு துறை அதிகாரிகள் பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் அடங்கிய முத்தரப்புக் கூட்டம் நடத்தி விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என ஆலைகளில் வேறு ஏதேனும் சிரமம் இருக்கிறதா என்பதை விவாதித்தால் விபத்துக்கள் குறையும்.
இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: பட்டாசு ஆலைகளில் நிரந்தர தொழிலாளர்களை கொண்டு பணி செய்வதை முறைப்படுத்தினால் வருகை பதிவேடுகளில் முறைகேடு செய்வது குறையும்.
ஒப்பந்த, குறுகிய கால தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். பட்டாசு தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு அதிகரிக்க வேண்டும். வெடி மருந்து ஆய்வுக் கூடங்களில் மொழி அறிவு இல்லாதவர்களை பணிக்கு வைக்க கூடாது, என்றார்.